இந்த நிகழ்ச்சி நடந்து ஒரு மூன்று வருடமாவது இருக்கும் – நன் என் அக்காள் மகனை (வயது நான்கு) சைக்கிளில் அழைத்து சென்று கொண்டிருந்தேன். அவன் கான்வென்டில் படிபதால் நான் ஆங்கிலத்தில் உரையாட நினைத்து அவனிடம் ஹேய் பாய் வாட் இஸ் திஸ்? என்று சைக்கிள் பெல்லை அடித்து விட்டு கேட்டேன் – அதற்கு அவன் – திஸ் இஸ் சைக்கிள் பெல் என்று மழலையுடன் பதில் அளித்தான். சிறிது தூரம் சென்றிருப்போம் லாம்ப் போஸ்ட் கண்ணில் பட்டது – மீண்டும் நான் அவனிடம் “ஹே பாய் வாட் இஸ் திஸ் என்று லாம்ப் போஸ்டை காட்டி கேட்டேன்” உடனே மாமா சைக்கிள் விட்டு நான் இறங்கனும் என்றான், நானும் சைக்கிளை நிறுத்தினேன் அவன் இறங்கி என் எதிரில் இரண்டு கையையும் கட்டி கொண்டு “ஐயோ மாமா உங்களுக்கு இங்கிலிஷே தெரியல – கிட்ட இருக்குற பொருளை தன “வாட் இஸ் திஸ் திஸ்னு கேக்கணும் – தூரமா இருக்கும் பொருளை வாட் இஸ் தட் ன்னு கேக்கணும் – நீங்க அப்படி கேல்லுங்கோ நான் பதில் சொல்றேன் ” என்றானே பார்க்கலாம். இந்த காலத்து குழந்தைகளுக்கு ஆங்கிலம் ஏதோ ஏனோ தானோ என்று சொல்லி தர படவில்லை அவர்களுக்கு இலக்கணத்தோடு சொல்லி தருகிறார்கள் இது நிச்சயமாக வரவேற்க படவேண்டிய ஒன்று தானே…
-
அண்மைய இடுகைகள்
தொகுப்புகள்
வகைகள்
மேல்